தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அவருடைய கல்வி கட்டணம் ரத்து செய்யப்படுவதற்கான எல்லாச் சூழலையும் உருவாக்கித் தருவோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.ஏற்கனவே இரண்டு கட்டங்களாக இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இன்று 3-ஆம் கட்டமாக விழுப்புரம் மாவட்டம் கானை குப்பம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்பொழுது அவர் பேசுகையில்,சகோதரி அஞ்சலை அவர்கள் நர்சிங் படித்து முடித்தும் அவருடைய மகளுக்கு வேலை இல்லை. அதனால் அவருடைய கல்விக்கடனைச் செலுத்த முடியாத வறுமை நிலையில் தவித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் வேதனையைச் சொல்லி இருக்கிறார்கள். கல்விக் கட்டணத்தில் 40,000 ரூபாய் பாக்கி இருக்கிறது. அதனால் கல்லூரியில் மாற்றுச் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.நான் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலிலும், அதே போல இப்போது வருகிற தேர்தலில் சட்டமன்றத் தேர்தலிலும் மாணவர்கள் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற உறுதியை நான் சொல்லி இருக்கிறேன். ஆனால் இதைப் பார்த்தப் பிறகு இப்போது இருக்கும் பழனிசாமி அவர்கள், நான் நினைத்ததை ஸ்டாலின் சொல்லிவிட்டார் என்று சொல்லுவார்.நான் அதற்கு ஒரு பதில் சொன்னேன், நீங்கள் யார் காலிலும் விழக் கூடாது என்று சொன்னால் விழாமல் இருப்பீர்களா? இதுதான் என்னுடைய கேள்வி.
இதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அவருடைய கல்வி கட்டணம் ரத்து செய்யப்படுவதற்கான எல்லாச் சூழலையும் உருவாக்கித் தருவோம் என்ற அந்த நம்பிக்கையை அந்த சகோதரிக்கு நான் சொல்ல விரும்புகிறேன் என்று பேசியுள்ளார்.