அதிக சத்து மாத்திரையால் மாணவி மரணம் – முதல்வர் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவிப்பு!

Default Image

சத்து மாத்திரையை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்தார்.

சத்து மாத்திரையால் மாணவி மரணம்:

ஊட்டியில் உள்ள அரசு உருதுப் பள்ளியில் நான்கு மாணவிகள் போட்டி போட்டு அதிக சத்து மாத்திரை சாப்பிட்டதால் மயக்கமடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பெற்று வந்த 4 மாணவிகளில் ஒருவர் உயிரிழந்தார். மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் அளித்த சுகாதார ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அரசு உருதுப் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவிகளுக்கு மாத்திரை கொடுத்த ஆசிரியர், ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் இரங்கல்:

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பான அறிவிப்பில், நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் கடந்த 6ம் தேதி 4 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

சிகிச்சை அளிக்க உத்தரவு:

இவர்களில் மாணவிகளும் மேல் 4 அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இதில் சிகிச்சைக்காக கோவை ஜெய்பா பாத்திமா என்ற மாணவி சென்னைக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்து வரும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாசஜியா, ஆயிஷா மற்றும் குல்தூண் நிஷா ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

நிதியுதவி அறிவிப்பு:

உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கும் அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த மாணவியின்  குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்