நீட் தேர்வு ஹால்டிக்கெட் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி!
நீட் தேர்வு ஹால்டிக்கெட் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்ட புதுக்கோட்டை மாணவி.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள டி-களபம் எனும் கிராமத்தை சேர்ந்த விவாசாயியின் மக்கள் தான் ஹரிஷ்மா. தனியார் பள்ளியில் பயின்ற இவர், பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்துள்ளார். அவருடன் விண்ணப்பித்த சக மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வந்துள்ளது.
ஆனால், மனைவி ஹரிஷ்மாவுக்கு மட்டும் ஹால் டிக்கெட் வரவில்லையாம். இதனால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் விஷம் அருந்தியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு நேற்று நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வந்துள்ளதாம்.