நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவர் தற்கொலை…!

Default Image

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விஷம் குடித்து மாணவர் சுபாஷ் சந்திரபோஸ் தற்கொலை. 

இந்தியா முழுவதும் செப்.12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள்  கடந்த சில தினங்களுக்கு முன்பதாக வெளியாகியுள்ளது.

நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பதாகவே, தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டான். அதனை தொடர்ந்து, நீட் தேர்வு எழுதி முடித்த பின் தோல்வி பயத்தால், கனிமொழி, சௌந்தர்யா என்ற மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வடகுமரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவர், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த நிலையில், தேர்வு முடிவு வெளியான நவம்பர் 1ஆம் தேதியன்று பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து, அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மாணவர் சுபாஷ் சந்திர போஸ் சிகிச்சை பலனின்றி இன்று  அதிகாலை உயிரிழந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்