மாணவி தற்கொலை: கைது செய்யப்பட்ட மாணவருக்கு 15 நாள் சிறை ..!
11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க மகளிர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் “கல்லறையும், தாயின் கருவறை மட்டுமே பாதுகாப்பான இடம்” என்றும் SchoolisNotSafety, மேலும்,உறவினர்கள் என யாரையும் நம்ப வேண்டாம் என மாணவி உருக்கமாக எழுதியுள்ளார்.
இதனையடுத்து, மாணவியின் செல்போன் மற்றும் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவன் உட்பட 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த வழக்கில் கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்மீது போக்சோ, பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.