கோவையில் மாணவன் தாக்கப்பட்ட விவகாரம்: மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.!

Default Image

கோவை வீதியில் தள்ளுவண்டி உணவு கடை நடத்தி வருபவர் வேல்மயில். இவர் கடந்த 17ஆம் தேதி தனது மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் மகனுடன் இரவு டிபன் கடை நடத்தி வந்துள்ளார். இரவு 8 மணிக்கு மேல் தள்ளுவண்டியில் கடை நடத்திய நிலையில், ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் செல்லமணி கடையை உடனடியாக மூடும்படி அறிவுறுத்தினார். ஆனால் வேல்மணியும் அவரது மனைவியும் கடையை எடுக்காமல், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை ஒருமையில் பேசிய உதவி ஆய்வாளர் செல்லமணி, அவர்களின் செல்போனை பிடுங்கி கொண்டு உடனடியாக கடையை காலி பண்ண வேண்டும் என எச்சரித்தார். அதன் பின் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 10ம் வகுப்பு படிக்கும் வேல்மயில் மகனை காவல்துறை தாக்கப்பட்ட வீடியோ சமூக வளையதளத்தில் வேகமாக பரவியது.

இந்நிலையில் கோவையில் 10ம் வகுப்பு மாணவன் காவல்துறையினரால் தாக்கப்பட்டததுக்கு 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய கோவை காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவுவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்