பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! ஆகஸ்ட் 10-ம் தேதி முதல்வர் அறிவிப்பார் – கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, ஆகஸ்ட் 10-ம் தேதி முதல்வர் அறிவிப்பார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, ஆகஸ்ட் 10-ம் தேதி முதல்வர் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.