கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர்,கராத்தே தியாகராஜன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ,மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட கட்சினர் பங்கேற்றனர்.ஆனால் இந்த போராட்டம் அனுமதி இல்லாமல் நடைபெற்றதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர்,கராத்தே தியாகராஜன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ,மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா,சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் ஆகிய 7 பேரும் வரும் 26 ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…