குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.தமிழகத்திலும் சென்னை,கோவை ,மதுரை உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில், திமுக சார்பில் நாளை நடைபெறும் போராட்டத்தில் பாஜகவின் குடியுரிமை திருத்த சட்டத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம்.இலங்கையில் பவுத்த மதவாதிகளால் தமிழ் இந்துக்களும், இஸ்லாமியர்களும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். ஈழ தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கும் கடமையை செய்ய திமுக எப்போதும் தயங்காது . கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் குடியுரிமைச் சட்டத்தை திருத்துவதற்கு அவசர தேவை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈழத்தமிழர்களின் நலன் காக்கவும், சிறுபான்மையினரான முஸ்லிம் சமுதாயத்தினரின் உரிமைகளைக் காக்கவும், மதரீதியாக நாட்டைக் கூறுபோடும் மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 17 (நாளை) அன்று கழகம், போராட்டக் களம் காண்கிறது. அணிதிரள்வோம்! ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டென முழங்குவோம்! நாடு காத்திடத் திரளுவோம்! என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…