திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் போட்டியிட 2-வது முறையாக தூசி மோகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வருகின்ற சட்டமற்ற தேர்தலில் அதிமுக சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்ரமணியனும், அதிமுக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகனும் விருப்பமனு தாக்கல் செய்தனர். ஆனால், அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் செய்யாறு தொகுதியில் போட்டியிட தூசி மோகனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முக்கூர் சுப்ரமணியன் ஆதரவாளர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் தூசி மோகனை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக செய்யாறு தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும். முக்கூர் சுப்ரமணியனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும் வேறு ஒரு வேட்பாளரை அறிவிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும், “வேறு வேட்பாளரை அறிவித்தால் வெற்றி நிச்சயம்” என்ற பதாகைகளையும் கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்யாறு தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட தூசி மோகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…