கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 1,17,990 மாணவர்கள் தேர்வு எழுதினார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் ஜோதிஸ்ரீதுர்கா, ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நீட் தேர்வு பிரச்சினை குறித்து இன்று காலை 8 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் சார்பில் நீட் தொடர்பாக போராட்டம் நடத்தப்படும் என்றும், போராட்டம் நடத்த கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…