ஜெயலலிதா குறித்து பேசிய அண்ணாமலையை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்.
சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த வரும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக முழக்கம் எழுப்பிய நிலையில், தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கடுமையாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதால் தான் தமிழ்நாட்டில் ஊழல் பெருகிவிட்டதாக அண்ணாமலை கருத்து கூறியிருந்தார். இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து, கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக, அண்ணாமலை இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் முன்பு திரைத்துறையில்…
சென்னை : கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில், நானும்…
சென்னை : வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் பரங்கி - சென்னையை இடையே நவம்பர் 30இல் கரையைக் கடக்கும்…
சென்னை : இன்று (நவம்பர் 27) சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவான புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.…
சென்னை : தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் 47ஆவது பிறந்தநாள் இன்று. உதயநிதி பிறந்தநாளை…