தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதியும் நடைபெறுகிறது .வாக்கு எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் கடலூர் பண்ருட்டி அருகே நடுக்குப்பத்தில் ஊராட்சி மன்ற பதவிகளுக்கு அதிமுக, தேமுதிக பிரமுகர்கள் ஏலத்தில் எடுத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியது.இந்த ஏலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.50 லட்சமும் ,துணை தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.இந்த ஏலத்தில் அதிமுகவை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான ஏலத்தை எடுத்தார் என்றும் துணை தலைவருக்கான பதவியை தேமுதிகவை சேர்ந்த முருகன் என்பவர் எடுத்தார் ..ஊராட்சி தலைவர்,துணைத் தலைவர் பதவிகள் ஏலம்விடப்பட்டது என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏறபடுத்தியது.
இந்த நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும். இத்தகைய செயல்கள் வருந்தத்தக்கவை ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பதை தடுக்க தேர்தல் அலுவலர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…