கரையை கடந்தது கஜா புயலின் கண் பகுதி..!பின்பகுதி கரையைக் கடக்கும்போது எதிர் திசையில் புயல் காற்று வீசும் ..!வானிலை ஆய்வு மையம்
கஜா புயலின் கண் பகுதியின் பாதி கரையைக் கடந்து விட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், சரியாக 1.55 மணிக்கு கஜா புயலின் கண் பகுதியின் பாதி கரையைக் கடந்து விட்டது. இன்னும் 30 நிமிடங்களில் மீதி பாதியளவு கடக்கும்.கண் பகுதி கடந்தவுடன் புயலின் பின் பகுதி கரையைக் கடக்கும் பின்பகுதி கரையைக் கடக்கும்போது எதிர் திசையில் புயல் காற்று வீசக்கூடும். கண் பகுதி கடந்துவிட்டாலும் நாகையில் காற்றின் வேகம் குறையாது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.