தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு, புதுச்சேரி,கேரளா ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களை கொண்டு இயங்கி வருகிறது.
ஜூலை 1ஆம் தேதி காலை 6 மணி முதல் எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம் என்று எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது. விடுபட்ட லாரிகளுக்கும்,பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வணிக ஒப்பந்தம் வழங்க வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தது எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம்.
இதனையடுத்து போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி எண்ணெய் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதன் பின்னர் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.இதன் பின் எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் லாரிகள் சங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.இதனால் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…