6-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி.!
6-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியராக உள்ள சௌந்தரராஜன். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் பேராசிரியர் சௌந்தரராஜன் குறைவான மதிப்பெண்களை வழங்கியதாக கூறப்படுகிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை பேராசிரியர் வெளியிடவில்லை எனவும் வாய்மொழியாக தெரிவித்ததாக குற்றச்சாட்டினர்.
இதனால், தனது மதிப்பெண்ணை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் மாணவி ஒருவர் கேட்டுள்ளார். அப்போது பேராசிரியர் தன்னிடம் பாலியல் ரீதியாக வன்முறையில் ஈடுபட்டார் என அந்த மாணவி குற்றம்சாட்டினார். இதையடுத்து பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று பாதிக்கப்பட்ட மாணவி கையை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், 6-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.