தனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு
தனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தனியார் தண்ணீர் லாரிகள் பல தண்ணீர் எடுக்க உரிமம் இல்லாத காரணத்தால் அவ்வப்போது சிறைபிடிக்க படுவதால், தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவித்தது.இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 4500 லாரிகள் பங்கேற்றது . லாரிகள் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் தண்ணீருக்கு பெரும்தட்டப்படு ஏற்படும் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகியது.
இந்த நிலையில் இன்று தனியார் தண்ணீர் லாரிகள் சங்க நிர்வாகிகள் சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.