குடிநீர் நிறுவனங்களின் வேலை நிறுத்தம் தொடரும் – கூட்டத்தில் முடிவு..!
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சுமார் 420 ஆலைகள் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கின்றனர். இதனால் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனுமதியின்றி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கடலூரில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்களின் வேலை நிறுத்தம் தொடரும் என முடிவு செய்யப்பட்டது.