பெண் குழந்தைகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும் கீழ்த்தரமான கயவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட இருந்த நிலையில், இந்த படத்தில் அவர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு, பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் என்னவென்றால், முரளிதரன், இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற குற்றசாட்டு கிளம்பியதால், இந்த எதிர்ப்பு கிளப்பியது.
இந்நிலையில், இதுகுறித்து முத்தையா முரளிதரன் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்படாமல் இருக்க விஜய்சேதுபதி 800 திரைபடத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு ட்விட்டர் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளம் மூலமாக மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, தோனியின் மகளுக்கு ட்வீட்டர் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இதுகுறித்து விஜயகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தோனி மற்றும் விஜய் சேதுபதி மகள் குறித்து கற்பழிப்பு மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். பெண் குழந்தைகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும், கீழ்த்தரமான கயவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…