மீறி யாத்திரையை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்
மீறி யாத்திரையை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர்-6ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரையை நடத்த தடை விதிக்குமாறு பல்வேறு அரசியல் கட்சியினரும் தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் செந்தில்குமார், பாலமுருகன் ஆகியோர் வேல் யாத்திரையை தடை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வேல் யாத்திரையை நடத்தினால், கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், வேல் யாத்திரையை நடத்த அனுமதி தர இயலாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த தடைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து பேசுகையில், ‘பாஜகவின் வேல் யாத்திரை போன்றா ஊர்வலங்களை நடத்தினால், கொரோனா அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. இதனை தடுப்பதற்காக தான், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி யாத்திரை மேற்கொண்டால், கடும் தண்டனை விதிக்கப்படும்.’ என தெரிவித்துள்ளார்.