திமுக எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச்சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மேலும் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறநின் மனுக்களை அவசர வழக்காக பிற்பகலில் நீதிபதி நிர்மல்குமார் விசாரணை மேற்கொள்கிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகிய இருவர் மீது மே 29 வரை எந்தவித கடுமையான நடவடிக்கைளும் எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை மே 29 ஆம் தேதி ஒத்திவைத்து. யாரையும் புண்படுத்தும் நோக்கில் கருத்து கூறவில்லை என மனுவில் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறி கோவையை சேர்ந்த சேகர் என்பவர் புகார் அளித்துள்ளார். சேகரின் புகாரால் கோவை வெரைட்டி ஹால் காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…