இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை – தலைமைச்செயலாளர் இறையன்பு…!
- கொரானாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கும் விவகாரம்.
- லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவு.
சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான ஆய்வு கூட்டம் சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன்,பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன்,சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்,ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து,அந்தக் கூட்டத்தின்போது பேசிய தலைமைச்செயலாளர் இறையன்பு,
- அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுடன் தங்க அவர்களின் உறவினர்களை கட்டாயம் அனுமதிக்க கூடாது.
- கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் பெற்றால்,அந்த ஊழியர்கள் மீது இறக்கம் காட்டாமல் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஒவ்வொரு சிகிச்சை மையத்திலும் உதவி மையம் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகளின் நிலவரம் குறித்து அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்”,என்று உத்தரவிட்டுள்ளார்.