#Breaking:ஊழியர்கள் கவனத்திற்கு…இதனை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை – மின்வாரியம் எச்சரிக்கை!
தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் கட்டாயம் சீருடை விதிகளைக் பின்பற்ற வேண்டும் எனவும்,இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகக் கையேட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆடைக் குறியீடு இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறும் அலுவலகத்தின் அலங்காரத்தைப் பேணும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.அந்த வகையில்,மின்சார வாரிய பணியின் போது பெண் ஊழியர்கள் சேலை,சல்வார்,சுடிதாருடன் துப்பட்டா அணிந்து பணியாற்றலாம்.
அதே சமயம்,மின்சார வாரிய ஆண் ஊழியர்கள் தங்களது பணியின்போது பார்மல் பேண்ட்,வேட்டி மற்றும் இந்திய கலாச்சார உடைகளை அணியலாம்.ஆனால்,பணியின்போது ஊழியர்கள் கேசுவல் உடைகளை அணியக்கூடாது.இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,அலுவலகத்தில் கண்ணியம்,ஒழுக்கம் ஆகியவற்றை பேணும் வகையில் பணியாற்ற வேண்டும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.