மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்.
சென்னையில், நேற்று தனியாா் அமைப்புகள் சாா்பில் பள்ளி மாணவா்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள அரசுப் பள்ளி ஆசிரியா்களை மட்டுமே தொழிற்பயிற்சி மைய ஆசிரியா்களாகப் பணி மாற்றம் செய்யப்படுகிறது. கூடுதல் ஆசிரியா்கள் இல்லாத பள்ளிகளில் இருந்து மாற்றம் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியா்களுக்கு ஊதியம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லாமல் வழக்கம்போல் ஊதியம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தனியாா் பள்ளியில் சேரும் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தனியாா் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவுறுத்தலை மீறி, கட்டணம் வசூலித்தாலோ அல்லது கூடுதல்கள் கட்டணம் வசூலித்தாலோ அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், அவ்வாறு விதிமீறலில் ஈடுபடும் பள்ளிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…