ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை – ககன்தீப் சிங்..!
நாளை முதல் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயை கட்டுபடுத்த தமிழகத்தில் வருகின்ற 24-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மதியம் 12 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பல இடங்களில் 12 மணிக்கு மேலும் வாகனங்களில் பொதுமக்கள் செல்வதற்கு பல புகார்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், நாளை முதல் சென்னை மாநகராட்சியில் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கு பின் இதை தெரிவித்தார். ஐஏஎஸ், காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் ‘Zonal Enforcement Team’ அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.