மன அழுத்த நோய் என்பது இந்தியாவையே ஆட்டிப் படைப்பதாக ஆய்வுகள் அதிர வைக்கின்றன.. இது தொடர்பாக ஆய்வு நடத்திய நடத்திய தி லான்செட் சைக்கியாட்ரியானது 1990 முதல் இந்த விவகாரத்தில் ஆய்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகின்றது.
அவ்வாறு இந்தியாவிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.அந்த ஆய்வில் இந்திய மக்கள் தங்கள் இயலாமை மற்றும் தாழ்வு மனப்பான்மை மேலும் உடல்நிலை சோர்வு ஆகியவற்றுடன் எதிலுமே நாட்டமின்மை போன்றவைகளால் மன நோய்க்கு தள்ளப்பட்டு பாதிக்கப்படுவதாகவும் இதற்கு எல்லாம் மன அழுத்தம் தான் காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு லட்சம் மக்களில் குறைந்தது 836 பேர்கள் இந்த மன அழுத்ததிற்ற்கு ஆளாகி அதனால் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இந்நோய்க்கு அதிக மாக பாதிகப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாட்டு முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் வாழுகின்ற மக்கள் மனப் பதற்றம் தொடர்பாக பாதிக்கப்படுவதாகவும் இது அதிகரித்து வருவதாக தெரிவித்த நிலையில் மன அழுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் 1,00,000 லட்சம் பேரில் 325 பேர் மனநலம் பாதிக்கப்பட்டு கடுமையாக உளைச்சலுக்கு ஆளவதாகவும் இது மட்டுமல்லாமல் இருமுனையப் பிறழ்வு (Bipolar disorder) மற்றும் மனச்சிதைவு என்ற நோயாலும் இம்மக்கள் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.மேலும் 1990-2017 வரை ஒப்பிடுகையில் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதன்படி 2016 ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 4.3% தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது என்று கூறுகிறது.
மேலும் 130 கோடி மக்களை கொண்ட இந்தியாவில் ஏழில் ஒருவர் இம்மனநல நோயால் பாதிக்கப்பட்டுகின்றனர் என்றும் மன அழுத்தம், மனப்பதட்டம் மற்றும் மனச் சோர்வு, மனச் சிதைவு முதலியவற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம் வகுப்பது வருத்ததையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மன நோயை சரி செய்யும் வகையில் தமிழக அரசும் தனியார் மையங்களோடு இணைந்து மக்களுக்கு மனநல ஆலோசனைகளை அளித்து வருகின்றது.இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண தெளிவான ஒரு விழிப்புணர்வு அளிக்க வேண்டும் தேவை.
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…