‘இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்து வியூகம்’ தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை.!
தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்டமைப்புப் பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.
![aadhav arjuna - prashant kishor](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/aadhav-arjuna-prashant-kishor.webp)
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்டமைப்புப் பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி 2 வது நாளாக ஆலோசனை நடைபெறுகிறது. பிரசாந்த் கிஷோர் தரப்பில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது
அதன்படி, இன்று காலை தவெக தலைவர் விஜயை பனையூரில் உள்ள இல்லத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், தவெக அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் பிரசாந்த் கிஷோர் ஆகியோர் 2வது நாளாக சந்தித்தனர்.
கட்சி எந்த வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது, பதவிகள் அங்கு இருக்கும் நிர்வாகிகள் செயல்பாடுகள் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு தவெக-வுக்கு சிறப்பு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திம் உட்கட்டமைப்பு ஆலோசனைக்குப் பிறகு தேர்தல் கூறித்த ஆலோசனை நடைபெற்றது. இந்த சந்திப்பை முடித்துக்கொண்டு விஜயை சந்திக்கின்றனர். இன்று நடைபெற்ற ஆலோசனையில், ஒரு வீட்டிற்கு ஒரு வாக்கை உறுதி செய்யுமாறும், தமிழகத்தில் இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்து வியூகங்களை அமைக்க வேண்டும் எனவும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிவுரை வழங்கி உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)