21ஆம் தேதி புயல் உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்..!
மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை தமிழ்நாடு,புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் (19)-ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்:
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட ம் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் – தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நீடிக்கும். மார்ச் 19 இல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு வடகிழக்கில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.
21-ஆம் தேதி புயல்:
வங்கக்கடலில் மார்ச் 21-ஆம் தேதி புயல் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 20-ல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 21-இல் புயலாக வலுப்பெறும். 21-ல் புயலாக உருவெடுத்து பின் வடக்கு- வடகிழக்கில் நகர்ந்து வங்கதேசம்- மியான்மர் கரையோரத்தில் 22-ல் நிலைபெறும்.
4 நாட்களுக்கு எச்சரிக்கை:
இன்றும்,நாளையும் வங்கக்கடலில் தென்கிழக்கு, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும். மார்ச் 19, மற்றும் 20-ஆம் தேதி அந்தமான் கடல் பகுதி, வங்கக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும். குறைந்தபட்சம் மணிக்கு 45 கி. மீ முதல் 90 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசும் வாய்ப்புள்ளது என்பதால் மீனவர்களுக்கு 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.