புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் – அமைச்சர் அறிக்கை வெளியீடு!

Default Image

கன மற்றும் மிக கனமழை எச்சரிக்கை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ராமசந்திரன் அறிக்கை வெளியீடு.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இதனால் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் நாளையும், டிச.8ம் தேதி நள்ளிரவு முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதால் டிசம்பர் 8 & 9 தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரனமாக டிச. 7ம் தேதி நள்ளிரவு முதல் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். இந்த நிலையில், வங்கக் கடலில் புயல் உருவாகும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 5,093 நிவாரண முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயாராக உள்ளன. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்களை முகாம்களுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.

பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநில வசரகள அவசர கால செயல்பட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்