புயல் பாதிப்பு நிவாரணம்.! வங்கி கணக்கு எண்ணை அறிவித்த தமிழக அரசு.!
மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கினார். மேலும், அனைத்து சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், ‘மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வங்கி விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
புயல் நிவாரண நிதி – தனது ஒருமாத ஊதியத்தை வழங்கிய முதல்வர்..!
அதில், பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடவுள்ளார்கள்.
இந்த நன்கொடைகளை மின்னணு முறை மூலம் பின்வருமாறு வழங்கலாம். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் செலுத்துவதற்கான அனைத்து விவரங்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
விவரங்களை அறிய..
‘மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வங்கி விவரங்கள் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.#CMMKSTALIN | #TNDIPR | #CycloneMichaung@mkstalin pic.twitter.com/MppHfsRAS2
— TN DIPR (@TNDIPRNEWS) December 8, 2023