புயல் பாதிப்பு – முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு

புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில் ,கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிச்சாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.
நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது.இதன் விளைவாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளது.குறிப்பாக கடலூர்திருவாரூர்,நாகை மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகள் அதிகம் உள்ளது.இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மீட்பு பணிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புயல் பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சேதங்களை ஆய்வு செய்கிறார்.நாளை திருவாரூர், நாகப்பட்டினத்திலும் ஆய்வு நடத்த உள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025