வேலூரில் இனிமேல் வாரம் 3 நாட்கள் மட்டும் தான் கடைகள் திறப்பு- மாவட்ட ஆட்சியர்
வேலூரில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என மாவட்ட மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் கொரோனா தோற்று நாளுக்கு நாள் வேகமெடுத்து வருவதால் சென்னை மற்றும் 3 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு அமலில் உள்ளது இந்நிலையில் வேலூரில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக அதிகமாக கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 408-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காய்கறி, மளிகைக்கடைகள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மட்டுமே செயல்படும் என்றும் துணிக்கடைகள், நகைக்கடைகள் ஞாயிறு, வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டுமே இயங்கும் இறைச்சி கடைகளுக்கு ஞாயிறு மற்றும் புதன் கிழமை மட்டும் செயல்படும். அதே, போல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்,என மாவட்ட மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் .