ஆட்சிமன்ற குழுவில் கூட்டாமல் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவுகளை தான் நடைமுறைப்படுத்துகிறார்கள்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை பேட்டி அளித்தார். அப்போது, இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பெயர் இரண்டையும் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் பயன்படுத்த இடைக்கால தடைவிதிக்க கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததேன்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க கூடாது என புகார் செய்தேன். ஆட்சிமன்ற குழுவில் கூட்டாமல் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவுகளை தான் நடைமுறைப்படுத்துகிறார்கள். விளக்கம் கேட்காமல் நேற்று கூட அன்வர்ராஜா அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அவர்களிடம் ரூ.20 கோடிக்கு மேல் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு அளித்து அவர்களிடம் நேர்காணல் அளிக்காமல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது விதிமீறல். வேட்பாளர்களை முடிவு செய்யக்கூடிய ஆட்சிமன்றக் குழு கூட்டத்தை கூட்டவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியாக அதிமுகவை இபிஎஸ், ஓபிஎஸ் நடத்திக்கொண்டிருக்கின்றனர். என்னையும், அன்வர் ராஜா உள்ளிட்டோரையும் வேண்டுமென்றே அதிமுகவில் இருந்து நீக்கினர்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…