தொடர்ந்து 17வது நாளாக பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்!
தொடர்ந்து 17வது நாளாகத் தொடரும் பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
காற்று மாசுபாட்டிற்கு பட்டாசுகள் தான் காரணம் என்றும் இந்தியா முழுக்க பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால், விற்பனையாளர்கள் யாரும் பட்டாசுகளுக்கான ஆர்டர் கொடுக்க முன்வரவில்லை. இதனால் பட்டாசு தொழில் முடங்கியுள்ளதாகவும், வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியும் 26ஆம் தேதி முதல், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போரட்டத்தைத் தொடங்கியுள்ளனர். போராட்டத்தின் 17வது நாளான இன்றும் 800க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பட்டாசு ஆலை தொழிலாளர்கள் திருத்தங்கல் ரயில் நிலையம் அருகே ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ரயில் நிலையத்தில் இருந்து சென்ற தொழிலாளர்கள் விருதுநகர் சிவகாசி சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
source: dinasuvadu.com