செய்தியாளர்களை அரசு குறிவைப்பதை நிறுத்த வேண்டும் – கனிமொழி
செய்தியாளர்களை அரசு குறிவைப்பதை நிறுத்த வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக ஹத்ராஸ் மாவட்டத்தில் நுழைவதற்கு செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.மேலும் அரசியல் கட்சினருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து ஹத்ராஸ் பகுதிக்குள் நுழைய செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,ஹத்ராஸ் வழக்கில் உண்மையை வெளிக் கொண்டு வரும் செய்தியாளர்களை அரசு குறிவைப்பதை நிறுத்த வேண்டும். குறிப்பாக உத்தரப்பிரதேச அரசு செய்தியாளர் தனுஸ்ரீ பாண்டே மற்றும் எதிர்க்கட்சியினரையும் அங்கு செல்வதிலிருந்து தடுப்பதற்கு பதில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Stop targeting journalists for bringing out the truth on #HathrasCase
UP govt must address the issue than trying to hound journalists particularly @TanushreePande and other opposition leaders.#tanushreepandey
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 3, 2020