தீய நோக்கத்துடன் செயல்படும் நச்சு சக்தி, தமிழகத்தில் திமுக தான் தான் என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை.
கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டறிந்து, இந்த வன்முறை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையை பயன்படுத்துங்கள், இல்லையெனில் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் வீடு, அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், இந்து அமைப்புகளின் நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள், கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதற்கு காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும்.
பெட்ரோல் குண்டு வீசிய காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. அதனடிப்படையில் 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்பது முதல்வருக்கு தெரியாமல் இருக்க முடியாது. இதுகுறித்து முதலமைச்சர் ஒரு வார்த்தை கூட கூறாமல், திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் சில அரசியல் சக்திகள் பாடுபட்டு வருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்பட்டு கொண்டிருக்கும் அந்த நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் நம் பயணம்ததை தொடர வேண்டும் என கூறியுள்ளார்.
தீய நோக்கத்துடன் செயல்படும் நச்சு சக்தி, தமிழகத்தில் திமுக தான். குடும்ப அரசியல், ஊழல் இரண்டும் திமுகவின் இரு கண்கள். தங்களை எதிர்ப்பவர்களை நாகரிகமின்றி ஆபாசமாக விமர்சிப்பதை தமிழகத்தில் ஓர் அரசியல் கலாச்சாரமாக புகுத்தியவர்கள் திமுகவினர் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் விமர்சித்தார். திமுக என்ற நச்சு மரத்தை, ‘வளர்ச்சி’, ‘தேச ஒற்றுமை’ கோடாரி கொண்டு பாஜக வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை. பாஜக வளர்வதை கண்டு பொறுக்கமாட்டாமல், வீண் ஜம்பம் அடிப்பதை விட்டுவிட்டு, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை காப்பற்ற உறுதியுடன் நடவடிக்கை எடுங்கள் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…