கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது, தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. அப்படி முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்ட குறுஞ்செய்தி வருவது வழக்கம்.
தற்போது, உறுதிப்படுத்தப்பட்ட வரும் குறுஞ்செய்தி இந்தியில் வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், தொடர்வண்டி பயணச்சீட்டு பதிவு செய்தவுடன், உறுதிப்படுத்துதல் குறுஞ்செய்தி, இந்தியில் வருகிறது; இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பாலான மக்களுக்கு இந்தி தெரியாது. இந்திய ரயில்வே இதில் கவனம் செலுத்தி, அந்தந்த மாநில மொழிகளில் உறுதிப்படுத்துதல் செய்தியை அனுப்ப வேண்டுகிறேன்.
அனைத்துத் தளங்களிலும், இந்தியைத் திணித்து, மக்களைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்திவிட்டு, அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…