”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

நடிகர் விஜய் ‘திருநர் விங்' 9ஆம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்னவெஎன்று திருநர் இயக்க செயல்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா கண்டனம் தெரிவித்தெள்ளார்.

TVK Wings

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இதனிடையே, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 28 அணிகளை இன்று அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத புதுப்புது அணிகள் தவெகவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த 28 அணிகள் குறித்த பட்டியல் குறித்து அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்தாலும், அதிகாரப்பூர்வமாக கட்சி தரப்பில் வெளியிடப்படவில்லை.

இப்படி இருக்கையில், அந்த பட்டியலில் பெண்கள் அணி, இளம்பெண்கள் அணி, சிறார் அணி, குழந்தைகள் அணி, திருநங்கைகள் அணி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அணி, மீடியா அணி, உண்மை சரிபார்ப்பு அணி, உள்ளிட்ட அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், திருநங்கையர் அணி ஒன்பதாவது இடத்தில் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்காக குரல் கொடுக்கும் வித்யா, இந்தப் பிரச்னையை சுட்டிக் காட்டியிருக்கிறார். ‘9’ என்ற இந்த இழிவை இன்னும் எத்தனை நாட்களுக்குதான் நாங்கள் சுமக்க வேண்டும் என்று அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கட்டமாக பதிவிட்டுள்ள லிவிங் ஸ்மைல் வித்யா, ” நடிகர் விஜய் திருநர் விங் என்று துவக்கியிருப்பது நல்ல விசயம். அதை 9-ம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன? இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய்ண்ணா. இதையும் நாங்களே தான் மாரிலும், வயித்திலும் அடித்து கேட்க வேண்டும். தமிழ்கூறும் அறிவுஜீவுகள் கொஞ்சம் சேர்ந்து நில்லுங்க ப்ளீஸ்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்