மக்கள் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு , ரூ.5000 நிவாரண உதவி வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Default Image

மக்கள் மீது பழி போடுவதை முதலமைச்சர் நிறுத்திவிட்டு , ரூ.5000 நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தை பொருத்தவரை சென்னையில் தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.குறிப்பாக கோயம்பேடு சந்தை மூலமாக தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று  மட்டுமே  தமிழகத்தில் 509  பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை9227  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று மட்டுமே 380பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5262 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி கோயம்பேடு மூலமாக கொரோனா பரவுவதற்கு காரணம் என்ன என்று விளக்கம் அளித்தார்.அதாவது,கோயம்பேட்டில் கொரோனா பரவும் என்று முன்பே வியாபாரிகளை எச்சரித்தோம்.அரசின் எச்சரிக்கையை வியாபாரிகள் முதலில் ஏற்கவில்லை.அரசு நடவடிக்கை எடுக்காததால் தான் கொரோனா பரவியது என்று கூறியது தவறு என்று தெரிவித்தார்.  

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், கோயம்பேடு பரவலுக்கு திறனற்ற எடப்பாடி அரசே காரணம். கொரோனா குறித்து சட்டப்பேரவையிலே திமுக எச்சரிக்கை செய்த போது ‘ தமிழ்நாட்டுக்கு வராது ‘, ‘வந்தாலும் ஆபத்தில்லை என்று ஆருடம் சொன்னவர்கள் இப்பொழுது ‘வாழப் பழகிக் கொள்ள வேண்டும் ‘ என்று சொல்லி நோய் பரவலுக்கான பழியை பொதுமக்கள் ,வணிகர்கள் மீது போடுகிறார்கள்.தனது முரண்பாடுகளையும் தவறுகளையும் மறைப்பதற்கு வணிகர்கள்,பொதுமக்கள் மீதி பழிபோடுவதை முதலமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.தினக்கூலிகள்,அமைப்பு சாரா தொழிலாளர்கள் ,ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கு வாங்கும் சக்தி இல்லை எனும்போது , தேவையான உணவுப்பொருள்களை எங்ஙனம் வாங்கி நுகர முடியும் ?   1000 ரூபாயோடு அனைத்தும் முடிந்துவிட்டது என்று நினைக்காமல், திசைதிருப்பும் அறிவுப்புகளைத் தவிர்த்து , ரூ.5000 நிவாரண உதவி  வழங்கிட  முதல்வர் முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்