மின்சார ரயில் மீது கல்வீச்சு ..! மாணவர்கள் கைது … நடந்தது என்ன?

Published by
பால முருகன்

சென்னை : சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவுகளாக கற்களை வீசி மோதிக்கொண்ட சம்பவத்தில் மின்சார ரயில் ஜன்னல் கண்ணாடி உடைந்து ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த 2 பயணிகள் காயம் அடைந்தனர்.

இதனையடுத்து, மாம்பலம் ரயில்வே போலீசார் மின்சார ரயிலில் கல்வீச்சு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த கண்ணன், வேலவன், கத்தி வைத்திருந்த ஹரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மூவரையும் காவல் நிலைய ஜாமினிலேயே அவர்கள் விடுவித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். திடீரென கற்களை வீசி மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

டிரம்ப் விதித்த புதிய வரி! பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமையில் அவசர ஆலோசனை!

டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு தான் தற்போது உலக நாடுகளில் தலைப்பு…

15 minutes ago

டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில்…

51 minutes ago

“வெள்ளிவேல் திருட்டு இல்லை”.., இது தான் நடந்தது – இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்.!

கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…

2 hours ago

”இன்றும், நாளையும் 17 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…

3 hours ago

அடுத்த போட்டியில் இதை பன்னாதீங்க! ஆர்சிபிக்கு அட்வைஸ் கொடுத்த கேன் வில்லியம்சன்!

பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…

3 hours ago

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா – தவெக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்.?

சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…

4 hours ago