நடு ரோட்டில் கல்லை வைத்து நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம கும்பல்

Published by
murugan

மதுரையை சார்ந்த திருநகர் பாண்டியன் நகரை சார்ந்த குமரகுருபரன் மகன் பாஸ்கரன். இவர் கே.கேநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த23-ம் தேதி தனது பணியை முடித்து விட்டு இரவு 12மணிக்கு தனது வீட்டிற்கு மோட்டர் வாகனத்தில் வந்து கொண்டியிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டில் கிடந்த கல் மீது மோதி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.காயமடைந்த பாஸ்கரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி செய்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன் தினம் அதிகாலை 3மணிக்கு  சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதனை தொடர்ந்து ஆஸ்டின் பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர் .விசாரணையில் விபத்து நடந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தனர். அப்போது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிசிடிவி வீடியோ காட்சியில் பாஸ்கரன் வரும் ரோட்டில் மர்ம நபர்கள் ஒளி குறைவான இடத்தில் ஒரு பெரிய கல்லை நடு ரோட்டில் வைத்து விட்டு செல்கிறார்கள். ரோட்டில் கல் இருப்பதை பார்த்த வேன் டிரைவர் கல்லை எடுக்க முயற்சி செய்தார்.ஆனால் அந்த மர்ம நபர்கள் வேன் டிரைவரை தடுத்து விடுகின்றனர்.

அதன் பின் அந்த வழியாக வந்த பாஸ்கரன் அந்த கல்லில் மோதி  படுகாயம் அடைந்தார்.அப்போது பாஸ்கரிடம் இருந்த  நகை ,பணம் மற்றும் போன் ஆகியவை பறித்து கொண்டு அந்த மர்ம நபர்கள் சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

பின்பு ஆஸ்டின் பட்டி காவல்துறை விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றியது. மேலும் இந்த அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அந்த மர்ம நபரை திருநகர் போலீசார் கைது செய்தனர்.

முதல் கட்ட விசாரணையில் அவர் தனக்கன் குளம் பகுதியில் உள்ள பர்மா காலனியை சார்ந்த ராஜா என்பது தெரிய வந்தது.மேலும் அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published by
murugan
Tags: news

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

4 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

6 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

6 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

9 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

9 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

9 hours ago