பேடிஎம் சேமிப்பு கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம்! காவல்நிலையத்தில் புகார்!

பேடிஎம் சேமிப்பு கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம்.
இன்று அதிகமானோர் பணம் பரிமாற்றம் செய்வதற்காக பேடிஎம் செயலியை உபயோகித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை, பார்க்டவுன் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற நபர் இந்த செயலியை உபயோகித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி, இவரது பேடிஎம் சேமிப்பு கணக்கில் வைத்திருந்த ரூ.47, 705 பணத்தை திருடி விட்டதாக, இவரது போனிற்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து, ரவிக்குமார், சென்னை பூக்கடை போலீசாருடன் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, போலீசார் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்,அவர் மீண்டும், பூக்கடை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் ரவிகுமாரிடம் விசாரணை மேற்கொண்டதில், இவர் எந்த பணபரிமாற்றமும் செய்யவில்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பேடிஎம் நிறுவனத்திடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025