பிரசவத்தில் வயிற்றில் ஊசியை வைத்து தைத்த செவிலியர்கள்..!

Default Image

ராமநாதபுரம் மாவட்டம் வலசையயை சார்ந்தவர் ரம்யா(21) கர்ப்பணியாக உள்ள இவருக்கு கடந்த 17-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.இதைத்தொடர்ந்து இவர் உச்சிபுளி அரசு சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் மீண்டும் ரம்யாவிற்கு 19-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.அப்போது மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனையில் இருந்த செவிலியர்களே பிரசவம் பார்த்து உள்ளார்.பிரசவத்திற்கு பிறகு தாயும் ,சேயும் நலமாக இருந்து உள்ளனர்.
இந்நிலையில் இரண்டு நாள்கள் கழித்து ரம்யாவிற்கு வயிற்று வலியுடன் ரத்த கசியும் ஏற்பட்டது.இதை தொடர்ந்து ரம்யாவை ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து ஸ்கேன் எடுத்து பார்த்து உள்ளனர்.
ரம்யாவின் வயிற்றில் ஊசி வைத்து தைத்தது தெரியவந்தது.பின்னர்  ரம்யாவின் அரசு சுகாதார நிலையத்தை முற்றுகை இட்டு செவிலியர்களை கைது செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இதனிடையில் அறுவை சிகிக்சை ஊசியை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார இணை இயக்குநர் குமரகுருபரன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்