ஸ்டெர்லைட் விவகாரம்! தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளித்துள்ளது! – மனித உரிமை ஆணையம் தகவல்!
தூத்துக்குடியில் சென்ற ஆண்டு இதே நாளில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்ற போது அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு தூத்துக்குடியில் சில நாட்கள் பதட்டமான சூழ்நிலை சூழல் நிலவியது.
இதனை அடுத்து வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்து இருந்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட மனித உரிமை ஆணையம், துப்பாக்கி சூட்டில் இறந்து போன 13 பேரின் வீட்டிற்கும் சென்று விசாரணை மேற்கொண்டது.
இந்த போராட்டம் நடந்து ஒருவருடமாகிய நிலையில் இன்று மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது. அவர்கள் அளித்த அறிக்கையில் தமிழக அரசு உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கியதும், தமிழக அரசு ஒரு நபர் கமிஷன் அமைத்ததும், தங்களுக்கு திருப்திகரமாக இருந்ததால் இந்த வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்துள்ளது.
DINASUVADU