13 பேர் விஷவாயு தாக்கி இறந்ததற்கான ஆதாரங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்! ஸ்டெர்லைட் விவகாரத்தில் திருப்பம்!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையானது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மக்கள் அதிகாரம் இயக்கம் சார்பில், ஸ்டெர்லைட் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மக்கள் அதிகாரம் சார்பில் வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் பல்வேறு வாதங்களை முன்வைத்தார். முக்கியமாக, 2004 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட விஷவாயு தாக்குதலால் 13 பேர் உயிரிழந்ததை குறிப்பிட்டார். மேலும், போராட்டத்தில் குழந்தைகள் ஈடுபட்டதால் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேனர் வைத்ததவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளதாகும் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து, நீதிபதிகள் கூறுகையில், ‘பள்ளியில் ஏதேனும் விஐபிக்கள் வந்தால் பள்ளி குழந்தைகளை மலர்தூவி வரவேற்க கட்டாய படுத்து குறித்து சாடினார். மேலும், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முக்கிய சாலைகளில் அதிகமான பேனர் வைத்துள்ளவர்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். முக்கியமாக சென்னை அண்ணா சாலையில் இரு பக்கமும் பேனர் மட்டுமே உள்ளது. எனவும், புதிதாக ஊருக்கு வருபவர்கள் எப்படி சரியான முகவரிக்கு செல்வார்கள் என, கடிந்துகொண்டார்.
பின்னர் மக்கள் அதிகாரம் சார்பில் கூறப்பட்ட விஷவாயு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தது சம்பந்தமான ஆதாரங்களை மக்கள் அதிகாரம் தரப்பினர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். என கூறினார். பின்னர், இந்த வழக்கை ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025