ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் – வைகோ..!

Default Image

தமிழக அரசு பொறுப்பில் எடுத்துக்கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் தயாரிக்கலாம் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாமா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழக அரசு பொறுப்பில் எடுத்துக்கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் தயாரிக்கலாம். ஆக்சிஜன் பிரச்னையைக் கொண்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் கள்ளத்தனமாக ஆலையை திறக்க முயற்சிக்கிறது அதற்கு தமிழக அரசு இடம் தரக்கூடாது

பொறியாளர்களை, பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்கனவே பணி ஆற்றிக்கொண்டு இருக்கும் பொறியாளர்களை, ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்திக் கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை இயக்க அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்