மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட்டை மூடச்செய்தனர்- ஆளுனர் ரவி.!
நாட்டின் காப்பர் தேவையை நிறைவேற்றிவந்த ஸ்டெர்லைட்டை, மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் காப்பர் தேவை: தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் மூலம் நாட்டின் காப்பர் தேவைகள் பூர்த்தியாகிக் கொண்டிருந்த நிலையில், மக்களைத்தூண்டி விட்டு அந்த தாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். சென்னையின் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற, குடிமைப்பணி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுடன், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆளுநர் ரவி உரையாற்றினார்.
40% காப்பர் தேவை பூர்த்தி: அப்போது அவர் கூறியதாவது, நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும், ஸ்டெர்லைட் நாட்டின் காப்பர் தேவையை 40% சதவீதம் நிறைவேற்றி வந்தது, மக்களை தூண்டி விட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டனர் என கூறினார்.
ஸ்டெர்லைட் போராட்டம்: முன்னதாக ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுசூழல் மற்றும் மக்களுக்கு பல்வேறு கேடுகள் விளைவிப்பதாகக்கூறி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர், மேலும் ஆலை இயங்கக்கூடாது என்று மக்கள் நடத்திவந்த போராட்டத்தின் விளைவாக, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி அதில் குறிப்பாக 13பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஆளுநர் ரவி, மாணவர்களிடம் நடத்திய உரையாடலில் இவ்வாறு, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடந்ததில் வெளிநாட்டு நிதி உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது என்றும், எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கு காப்பரின் தேவை முக்கியம், தற்பொழுது அவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.