#BREAKING: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.., இடைக்கால அறிக்கை சமர்பிப்பு..!
தமிழக முதலமைச்சரை சந்தித்து ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்ப்பான இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் சமர்பித்தார்.
தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால், தூத்துக்குடி மக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்தினர். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க தமிழ்நாடு அரசால் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், விசாரணை ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சரை சந்தித்து இடைக்கால அறிக்கையை சமர்பித்தார்.