#BREAKING: ஸ்டெர்லைட் போராட்டம்.., தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் -தமிழக அரசு ..!

Default Image

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது வன்முறையின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற மாண்புமிகு நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் 14-5-2021 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற மாண்புமிகு நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை அரசு கவனமாகப் பரிசீலித்தது. ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 21-5-2021 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகளைத் திரும்பப் பெற்றிடவும், அதில் தொடர்புடைய கீழ்க்கண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற்றிட உத்தரவிட்டார்கள்.

அதன்படி, நல்லகண்ணு, வைகோ,கே.பாலகிருஷ்ணன், டிடிவி.தினகரன், பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்ட 13 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்