ஸ்டெர்லைட் ஆலை – வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி.!

Default Image

வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட்க்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மே 22ல் போராட்டத்தில் துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் உயிரிழந்தனர். மே 28 ல் நீர், நிலம், காற்றுக்கு பாதிப்பு விளைவிளைக்கும் என்று கருதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் ஆலையை திறக்க டிசம்பர் மாதம் பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஸ்டெர்லைட் அலையை திறக்க அனுமதியில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Earthquake Magnitude Strikes Nepal
MKStalin
Seeman - Police
tn rainy
Chief Minister Stalin Vadivelu
mk stalin